தலைஞாயிறு அருகே அரிச்சந்திரா நதியில் இயக்கு அணை கட்டும் பணி - கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு
தலைஞாயிறு அருகே அரிச்சந்திரா நதியில் இயக்கு அணை கட்டும் பணியை கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார்.
வாய்மேடு,
தலைஞாயிறு ஒன்றியத்தில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் காவிரி டெல்டாவில் உள்ள வெண்ணாறு உபவடிநில பகுதியில் ரூ.960 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று பணிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதை தொடர்ந்து ஆசிய வளர்ச்சி வங்கி கடனுதவியின் மூலம் தலைஞாயிறு அருகே ஆலங்குடி பகுதியில் அரிச்சந்திரா நதியில் இயக்கு அணை மற்றும் நடைபாலம் கட்டும் பணியையும், மணக்குடி- பிரிஞ்சிமூலை இடையே அரிச்சந்திரா நிதியில் இயக்கு அணை கட்டும் பணியையும்,, கேசவன் ஓடையில் நடைபாலம், கட்டு்ம் பணியையும், முதலியப்பன்கண்டி பகுதியில் அரிச்சந்திரா ஆற்றில் இயக்கு அணை மற்றும் ஜெனரேட்டர் அறை பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது செயற்பொறியாளர்கள் முருகவேல், தங்கராசு உதவி செயற்பொறியாளர்கள் பாண்டியன், கண்ணப்பன், சண்முகம் ஆகியோர் உடன் இருந்தனர்.
வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது அந்த பள்ளியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மாணவர் சேர்க்கை பணியை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பள்ளியில் உள்ள அடிப்படை வசதி குறித்தும் ஆய்வு செய்தார்.
அப்போது இந்த பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளை சேர்ந்த ஆசிரியர்களை கலெக்டர் பாராட்டினார்.இந்த ஆய்வின் போது பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வன், கூடுதல் பொறுப்பு தலைமை ஆசிரியர் சாமிநாதன், உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜா, பொய்யாமொழி ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story