வேன்-ஆட்டோ மோதல்; பெண் பலி
வேன்-ஆட்டோ மோதிக்கொண்டதில் பெண் பலியானார்.
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள அழகம்மாள்புரம் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்தவர்கள் நேற்று காலை 8 மணிக்கு காளத்திமடத்தில் உள்ள ரப்பர் கம்பெனிக்கு வேலைக்காக ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். முத்தம்மாள்புரத்தை சேர்ந்த ராம்குமார் என்பவர் ஆட்டோவை ஓட்டினார்.
ஐந்தான்கட்டளை அருகே சென்றபோது விக்கிரமசிங்கபுரம் பகுதியில் உள்ள ஆலையில் இரவு பணியை முடித்த பணியாளர்களை ஏற்றிக் கொண்டு வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது வேனும், ஆட்டோவும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன.
இதில் ஆட்டோவில் பயணம் செய்த அழகம்மாள்புரம் வடக்கு தெருவை சேர்ந்த குணசேகரன் மனைவி கனியம்மாள் (வயது 40) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் ஆட்டோவில் வந்த சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த ராஜேஸ்வரி (32), மாலதி (35), அழகம்மாள்புரத்தை ேசர்ந்த இசக்கியம்மாள் (35), ஐந்தான்கட்டளையை சேர்ந்த ராஜேஸ்வரி (40), முத்தம்மாள்புரத்தை சேர்ந்த ராதா, ஆட்டோ டிரைவர் ராம்குமார் மற்றும் முருகன் (35) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேன் டிரைவர் கபாலிபாறையை சேர்ந்த அய்யப்பன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story