சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கினால் வழிபாட்டு தலமான கோவில்கள் மூடப்பட்டிருந்தால் பக்தர்களின்றி கோவில்களில் தினசரி பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தது. தற்போது கொரோனா ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளால் வழிபாட்டு தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன்படி கடந்த 5-ந்தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து வழிபாட்டு தலமான கோவிலுக்கு சென்று பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் சிவன் கோவில்களில் நந்தி பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் நந்திகேஸ்வரருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் முககவசம் அணிந்து வந்த பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து நந்திகேஸ்வரரை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.

Related Tags :
Next Story