ஒரகடம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு


ஒரகடம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 8 July 2021 10:51 AM IST (Updated: 8 July 2021 10:51 AM IST)
t-max-icont-min-icon

ஒரகடம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த எழிச்சூர் மதுரா புதுப்பேட்டை பஜனை கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 29). இவர் தன்னுடைய வீட்டில் மின்மோட்டார் மூலம் தொட்டியில் தண்ணீர் ஏற்றினார். அப்போது மின்மோட்டாரில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட பாஸ்கர் காயம் அடைந்தார்.

சாவு

அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக எழிச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதல் உதவி சிகிச்சை பெற்ற பாஸ்கரை வாலாஜாபாத் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பாஸ்கர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து சென்ற ஒரகடம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story