கொரோனா தடுப்பு விதிகளை மீறிய 20 கடைக்காரர்களுக்கு அபராதம்


கொரோனா தடுப்பு விதிகளை மீறிய 20 கடைக்காரர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 10 July 2021 2:44 AM IST (Updated: 10 July 2021 2:44 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பு விதிகளை மீறிய 20 கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

வி.கைகாட்டி:
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி நான்கு வழிச்சாலையில் நேற்று அரியலூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வகீல், சுகாதார ஆய்வாளர்கள் மணிகண்டன், அருண்பாண்டியன் மற்றும் பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் மளிகை கடை, துணிக்கடை, பெட்டிக்கடை மற்றும் வணிக வளாகங்கள் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முக கவசம் அணிவது போன்ற கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியது தொடர்பாக 20 கடைக்காரர்களுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டு, மொத்தம் ரூ.4 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. மேலும் முககவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து வி.கைகாட்டியில் உள்ள கடைகளில் கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும், வாடிக்கையாளர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கொரோனா பரவல் தடுப்பு விதிகளை மீறும் பட்சத்தில் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உரிமையாளர்களிடம், அதிகாரிகள் எச்சரித்து சென்றனர்.

Next Story