கூத்தாநல்லூரில் பலத்த மழை; விவசாயிகள் மகிழ்ச்சி


கூத்தாநல்லூரில் பலத்த மழை; விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 10 July 2021 12:47 PM GMT (Updated: 10 July 2021 12:47 PM GMT)

கூத்தாநல்லூரில் பெய்த பலத்த மழையால் விவசாயிகள் மகி்ழ்ச்சி அடைந்தனர்.

கூத்தாநல்லூர்,

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடுமையாக வெயில் சுட்டெரித்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் நேற்று காலை முதலே வெயில் அடிக்க தொடங்கினாலும் அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

நேற்று மாலை 4.20 மணிக்கு திடீரென கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, பொதக்குடி, வக்ராநல்லூர், மரக்கடை, கோரையாறு, திருராமேஸ்வரம், வேளுக்குடி, நாகங்குடி, வடபாதிமங்கலம், ஓவர்ச்சேரி, குடிதாங்கிச்சேரி, குலமாணிக்கம், ராமநாதபுரம், பழையனூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளிலும் வயல்களிலும் மழைநீர் தேங்கியது. திடீரென பெய்த மழையால் குளிர்ச்சியான காலநிலை நிலவியது. இந்த மழை சாகுபடிக்கு உதவியாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர்.

Next Story