சட்டவிரோதமாக இயங்கிய ஏ சி பாருக்கு சீல்


சட்டவிரோதமாக இயங்கிய ஏ சி பாருக்கு சீல்
x
தினத்தந்தி 10 July 2021 10:53 PM IST (Updated: 10 July 2021 10:53 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் சட்டவிரோதமாக இயங்கிய ஏ சி பாருக்கு சீல்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் சட்டவிரோதமாக மது பார் இயங்கி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசு மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது கள்ளக்குறிச்சி அண்ணாநகரில் தென்கீரனூர் செல்லும் சாலையில் ஊரடங்கு உத்தரவை மீறி சட்டவிரோதமாக தனியார் ஏ.சி.மதுபார் செயல்பட்டு வந்ததை கண்டுபிடித்தனர். இதுபற்றிய தகவல் அறிந்துவந்த தனி தாசில்தார்(மதுவிலக்கு) ராஜராஜன் சட்டவிரோதமாக இயங்கி வந்த தனியார் ஏ.சி. மதுபாரை பூட்டி சீல் வைத்தார்.

Related Tags :
Next Story