அரசு பஸ் டிரைவரை தாக்கிய வாலிபா் கைது
அரசு பஸ் டிரைவரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கூடங்குளம்:
கூடங்குளத்தை சேர்ந்தவர் முத்து குமரேசன் (வயது 45). அரசு பஸ் டிரைவரான இவர் கூடங்குளத்திற்கு பஸ்சை ஓட்டிச் சென்றார். கூடங்குளம் அருகே சென்ற போது சாலையோரத்தில் நின்று கொண்டு இருந்த சுரேஷ் (25) என்பவர் மதுபோதையில் பஸ்சை வழிமறித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து முத்துகுமரேசன் பஸ்சை ஓரமாக நிறுத்தி சுரேஷிடம் சென்று கேட்டார்.
அப்போது, கீழே கிடந்த கல்லால் முத்துகுமரேசனை தாக்கிவிட்டு சுரேஷ் தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின் பேரில் கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுரேஷை கைது செய்தனர்.
Related Tags :
Next Story