கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 12 July 2021 4:26 PM IST (Updated: 12 July 2021 4:26 PM IST)
t-max-icont-min-icon

கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை.

பூந்தமல்லி,

சென்னை கோயம்பேடு, சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மகன் சபரி (வயது 21). கல்லூரியில் படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்ற சபரி, நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கழிவறைக்குள் சபரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கடந்த சில நாட்களாக சபரி, மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர், கழிவறைக்குள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுபற்றி கோயம்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story