இந்திய கம்யூனிஸ்டு மனு


இந்திய கம்யூனிஸ்டு மனு
x
தினத்தந்தி 13 July 2021 1:14 AM IST (Updated: 13 July 2021 1:14 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடையை மூடக்ே்காரி இந்திய கம்யூனிஸ்டு மனு

தளவாய்புரம்
சேத்தூர் பஸ் நிலையம் அருகில் ராஜபாளையம்- தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையை மூட வலியுறுத்தி நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ராஜபாளையம் தாசில்தார் ராமச்சந்திரனிடம் முன்னாள் எம்.பி.யும், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளருமான லிங்கம் தலைமையில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், சேத்தூர் பஸ் நிலையம் அருகில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைகளில் அரசு டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என்று ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி  டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதி பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.  இங்கு அடிக்கடி சட்டம்,ஒழுங்கு பிரச்சினைகளும் ஏற்பட்டு வருகிறது. ஆகவே பொதுமக்கள் நலன் கருதி இந்த டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story