மாவட்ட செய்திகள்

விளையாட்டாக காலால் எட்டி உதைத்தபோது கிணற்றில் தவறி விழுந்து நண்பர் பலி + "||" + Friend falls and falls into well when kicked by foot as sport

விளையாட்டாக காலால் எட்டி உதைத்தபோது கிணற்றில் தவறி விழுந்து நண்பர் பலி

விளையாட்டாக காலால் எட்டி உதைத்தபோது கிணற்றில் தவறி விழுந்து நண்பர் பலி
விளையாட்டாக காலால் எட்டி உதைத்தபோது கிணற்றில் தவறி விழுந்து நண்பர் பலி.
தாம்பரம்,

சென்னை தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 37). இவர், தனது நண்பரான கார்த்திக் என்பவருடன் அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்கச் சென்ற போது கிணற்றுக்குள் தவறி விழுந்து பலியானதாக கூறப்பட்டது.


இதுபற்றி சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கிணற்றின் மேல் பகுதியில் அமர்ந்திருந்த புருஷோத்தமனை, அவருக்கு பின்புறமாக குடிபோதையில் நின்றிருந்த அவருடைய நண்பர் கார்த்திக் காலால் எட்டி உதைத்ததில் அவர் கிணற்றுக்குள் விழுந்து இறந்தது தெரியவந்தது. கார்த்திக்கிடம் போலீசார் விசாரித்தபோது, தான் விளையாட்டாக புருஷோத்தமனை காலால் எட்டி உதைத்து கிணற்றில் தள்ளியதாகவும், ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் உயிரிழந்ததாகவும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் இந்த வழக்கை, விபத்து மரணம் பிரிவில் மாற்றி பதிவு செய்து, கார்த்திக்கை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. விஷவண்டு கடித்து சப்-இன்ஸ்பெக்டர் பலி
விஷவண்டு கடித்து சப்-இன்ஸ்பெக்டர் பலி.
2. கிணற்றில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பலி
கிணற்றில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பலி.
3. விநாயகர் சிலையை கரைத்துவிட்டு குளத்தில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி பலி
விநாயகர் சிலையை குளத்தில் கரைத்துவிட்டு குளித்த சிறுவன், நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.
4. காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மீது தனியார் நிறுவன பஸ் மோதல்; பெண் பலி 5 பேர் படுகாயம்
காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மீது தனியார் நிறுவன பஸ் மோதிய விபத்தில் பெண் பலியானார். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
5. மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி
மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலியானார்.