அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பலி


அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பலி
x
தினத்தந்தி 20 July 2021 2:57 AM IST (Updated: 20 July 2021 2:57 AM IST)
t-max-icont-min-icon

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பரிதாபமாக இறந்தார்.

உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள நாச்சியார்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம்(வயது 59). விவசாயியான இவர் நேற்று மதியம் நாச்சியார்பேட்டையில் உள்ள அவரது முருங்கை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்றார். அப்போது மின் மோட்டாருக்கு செல்லும் மின்கம்பி காற்றின் காரணமாக பக்கத்து விவசாய நிலத்தில் அறுந்து கிடந்ததை கவனிக்காத ரத்தினம், மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உடையார்பாளையம் போலீசார், ரத்தினத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து இன்ஸ்பெக்டர் ரவி சக்கரவர்த்தி வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். மின்சாரம் பாய்ந்து விவசாயி இறந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story