கோவில்பட்டி மாவு அரவை ஆலைகளில் பதுக்கிய 2டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கோவில்பட்டி மாவு அரவை ஆலைகளில் பதுக்கிய 2டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டியிலுள்ள மாவு அரவை ஆலைகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 2 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் ெசய்து நடவடிக்கை எடுத்தனர்.
கலெக்டர் உத்தரவு
கோவில்பட்டி பகுதி மாவுஅரவை ஆலைகளில் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தி வரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜூக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் கோவில்பட்டி உதவி கலெக்டர் சங்கரநாரயணன், தாசில்தார் அமுதா, கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், வட்டவழங்கல் அலுவலர் செல்வக்குமார் கொண்ட குழுவினர் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
மாவுஅரவை ஆலைகளில் பதுக்கல்
அப்போது கடலைக்கார தெருவில் விஜய் என்பருக்கு சொந்தமான மாவு அரவை ஆலை, சின்னகருப்பசாமி கோவில்தெரு, கருவாட்டுப்பேட்டை தெருவில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான மாவு அரவை ஆலை மற்றும் குடோனில் நேற்று முன்தினம் இரவு சோதனை நடத்திய போது, அங்கு ரேஷன் அரிசி, கோதுமை ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சோதனையில் ரேஷன் அரிசி மட்டுமின்றி, அவை அரவை செய்யப் பட்டமாவு மூட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. நேற்று இரவு நடத்திய ஒரு நாள் சோதனையில் 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பதுக்கியவர்கள் மீது நடவடிக்கை
இது குறித்து கோவில்பட்டி தாலுகா விநியோக அதிகாரி செல்வகுமார் தூத்துக்குடி குற்ற புலனாய்வு துறைக்கு புகார் அளித்தார்.
இதன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ரேஷன் அரிசி பதுக்கி வைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் இரவில் நடைபெற்ற சோதனையில் 12டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப் பட்டு இருப்பது கோவில்பட்டி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story