சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகள்


சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகள்
x
தினத்தந்தி 21 July 2021 12:33 PM GMT (Updated: 21 July 2021 12:33 PM GMT)

சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகள்

திருப்பூர்
திருப்பூர் மாநகர் பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை பொதுமக்கள் குப்பை தொட்டிகளில் போடுவதற்கு வசதியாக, ஆங்காங்கே மாநகரில் குப்பை தொட்டிகளும் வைக்கப்பட்டுள்ன. இதில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். இந்நிலையில் மாநகரில் வெள்ளியங்காடு 60 அடி ரோடு பகுதி, நாவிதன் தோட்டம், பூச்சக்காடு முதல் வீதி உள்ளிட்ட பகுதிகளில் ரோட்டோரங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. தற்போது பலத்த காற்று வீசி வருவதால் இந்த குப்பைகள் காற்றில் அங்கும், இங்குமாக பரவி வருகின்றன. இதுபோல் குப்பைகள் அள்ளுவதற்கு தாமதம் ஆவதால் பல இடங்களில் பொதுமக்கள் குப்பை தொட்டிகளின் அருகே கொட்டி வருகிறார்கள்.
இதுபோல் இறைச்சி கழிவுகளும் அந்த பகுதிகளில் கொட்டப்படுவதால் நாய்கள், கழிவுகளை அங்கும், இங்குமாக இழுத்து செல்கின்றன. இவ்வாறாக மாநகராட்சி பகுதிகளில் பல இடங்களில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அவலம் இருந்து வருகிறது. எனவே மாநகராட்சி இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story