தூத்துக்குடி மாவட்டத்தில் கந்து வட்டி வசூலிப்பவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில்  கந்து வட்டி வசூலிப்பவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்   மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் எச்சரிக்கை
x
தினத்தந்தி 21 July 2021 12:59 PM GMT (Updated: 21 July 2021 12:59 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் கந்து வட்டி வசூலிப்பவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கந்து வட்டி வசூலிப்பவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கந்து வட்டி
கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலின் தாக்கத்தால் பொதுமக்கள் பலர் வேலையில்லாமல் பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் பொதுமக்களுக்கு கடன் கொடுத்தவர்கள், மற்றும் பல தனியார் நிறுவனங்களும் கடன் பெற்ற பொதுமக்களை தற்கொலை செய்யத் தூண்டும் வகையில் அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்து வருவதாக தகவல்கள் வருகிறது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்டத்தில் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக கொடுத்த புகார்களின் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பரில் தூத்துக்குடி மத்தியபாகம், ஆழ்வார்திருநகரி ஆகிய போலீஸ் நிலையங்களில் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்து உள்ளனர். சிலரை தேடி வருகின்றனர். ஏற்கனவே மாவட்ட கலெக்டர் பொதுமக்களை கடன் கேட்டு நெருக்கடி கொடுத்து துன்புறுத்தக்கூடாது என்று அறிவுறுத்தி உள்ளார்.
குண்டர் சட்டம்
பொதுமக்களின் உயிருக்கும், அவர்களது உடமைக்கும் பாதுகாப்பளிக்க வேண்டியது போலீசின் தலையாய கடமையாகும். இதுபோன்று கடன் பெற்ற பொதுமக்களிடம் சட்டவிரோதமாக கந்து வட்டி கேட்டு நெருக்கடி கொடுத்து, அவதூறான வார்த்தைகளில் பேசி மிரட்டல் விடுப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடு்த்து குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story