தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது


தூத்துக்குடியில்  மோட்டார் சைக்கிள் திருடிய  வாலிபர் கைது
x
தினத்தந்தி 21 July 2021 6:49 PM IST (Updated: 21 July 2021 6:49 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடி மேரி காலனியை சேர்ந்தவர் ஜோக்கின் மச்சாது. இவருடைய மகன் பெல்சிட்ரா (வயது 45). சம்பவத்தன்று இவர் பனிமயமாதா ஆலயத்தின் பின்புறம் மோட்டார் சைக்கிளை நிறுத்திவி்ட்டு சென்றாராம். சிறிது நேரம் கழித்து வந்த போது, யாரோ மர்ம ஆசாமி மோட்டார் சைக்கிளை திருடி சென்று இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து பெல்சிட்ரா தூத்துக்குடி தென்பாகம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது, தூத்துக்குடி செல்சினி காலனியை சேர்ந்த மணிகண்டன் மகன் சுதாகர் (21) என்பவர் மோட்டார்சைக்கிளை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார், சுதாகரை கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.


Next Story