மாவட்ட செய்திகள்

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் + "||" + The girl was abducted and raped

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்
சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்
பேரூர்

பேரூர் அருகே தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி. அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறாள். தற்போது, பள்ளி விடுமுறை என்பதால் ஆலாந்துறை அருகேயுள்ள ஒரு ஜவுளிக் கடைக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.  

இந்த நிலையில் சிறுமியும் அதே பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் கார்த்திக் (வயது 21) என்பவரும், காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 18-ந் தேதி வீட்டில் இருந்து  வேலைக்கு சென்ற சிறுமி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால், சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர்அவள் வேலைசெய்யும் கடைக்கு போன் செய்து கேட்டபோது, சிறுமி  கடையிலிருந்து சென்று விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த, சிறுமியின் பெற்றோர் ஆலாந்துறை போலீஸ் நிலையத்தில், புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில்,  போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கார்த்திக் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் மாயமான சிறுமியை தொடர்ந்து தேடி வந்த நிலையில், கார்த்திக், சிறுமியுடன் பன்னிமடை பகுதியில் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், அங்கு சென்ற போலீசார் இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில், கார்த்திக் சிறுமியை கடத்திச் சென்று பன்னிமடையில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கார்த்திக்கை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது  செய்தனர்.