மேலும் 17 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள்
திண்டுக்கல் மாவட்டத்துக்கு மேலும் 17 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வந்தது.
திண்டுக்கல்:
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இதற்காக மத்திய அரசிடம் இருந்து தடுப்பூசிகள் பெறப்பட்டு, மாவட்ட வாரியாக அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும் சுற்றுலா தலங்களில் வசிப்பவர்கள் அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதற்காக சுற்றுலா தலங்கள் அமைந்துள்ள மாவட்டங்களுக்கு அதிக அளவில் தடுப்பூசி வழங்கப்படுகிறது. அந்த வகையில் பழனி, கொடைக்கானல் இடம்பெற்றுள்ள திண்டுக்கல் மாவட்டத்துக்கு தடுப்பூசிகள் அதிகமாக ஒதுக்கப்படுகிறது.
அதன்படி நேற்று 17 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மாவட்டத்துக்கு வழங்கப்பட்டன. இதில் பழனி, கொடைக்கானல் இடம்பெற்றுள்ள பழனி சுகாதார மாவட்டத்துக்கு 9 ஆயிரத்து 500 தடுப்பூசிகளும், திண்டுக்கல் சுகாதார மாவட்டத்துக்கு 7 ஆயிரத்து 500 தடுப்பூசிகளும் வழங்கப்பட்டது. இதையடுத்து தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம் அடைந்துள்ளது. இதன்மூலம் நேற்று மாவட்டம் முழுவதும் 6 ஆயிரத்து 149 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
Related Tags :
Next Story