மாவட்ட செய்திகள்

நீர்ப்பிடிப்பு பகுதியில் பெட்ரோல் பங்க் அமைக்க ஊராட்சி நிர்வாகம் எதிர்ப்பு + "||" + Panchayat administration opposes setting up petrol punk

நீர்ப்பிடிப்பு பகுதியில் பெட்ரோல் பங்க் அமைக்க ஊராட்சி நிர்வாகம் எதிர்ப்பு

நீர்ப்பிடிப்பு பகுதியில் பெட்ரோல் பங்க் அமைக்க ஊராட்சி நிர்வாகம் எதிர்ப்பு
நீர்ப்பிடிப்பு பகுதியில் பெட்ரோல் பங்க் அமைக்க ஊராட்சி நிர்வாகம் எதிர்ப்பு
ஆரணி

ஆரணியை அடுத்த சேவூர் ஊராட்சியில் ஆரணி-வேலூர் நெடுஞ்சாலையில் ரகுநாதபுரம் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி கரையோரம் நீர்ப்பிடிப்பு பகுதியாக கருதப்படுகிறது. பெரிய ஏரி கரையில் கோடி விடும்போது, தற்போது பெட்ரோல் பங்க் அமைக்கப்படுவதாகக் கூறப்படும் இடத்தில் சுமார் 4 அடி அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கும். 

பெட்ரோல் பங்க் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் ஷர்மிளாவின் கணவர் தரணி, துணைத் தலைவர் ஏ.கே. குமரவேல், வார்டு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், பழனிசுதா, லேகாபிரியாமகேஷ், கவுரிரவி, சரவணன், தேவேந்திரன், சாந்தி ஏழுமலை, தமிழ்செல்வன், விஜயா சரவணன் உள்பட உறுப்பினர்கள் பணி நடக்கும் இடத்துக்கு வந்தனர். 

அவர்கள், ெபட்ரோல் பங்க் அமைப்பதற்காக நடக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். பணி தொடர்ந்து நடந்தால் கிராம மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம், எனக் கூறி எதிர்ப்புத் தெரிவித்தனர். அங்கு, பணியிலிருந்த தொழிலாளர்கள் அங்கிருந்து வெளியேறி சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.