தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x
தினத்தந்தி 21 July 2021 5:42 PM GMT (Updated: 2021-07-21T23:12:38+05:30)

தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்துகொண்டார்.

முதுகுளத்தூர், 
முதுகுளத்தூர் அருகே உள்ள செல்வநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மனைவி நாகவள்ளி. இவருடைய மகன் சத்திய மூர்த்தி (வயது 30). இவருக்கும் ராமலிங்கபுரத்தை சேர்ந்த உமா மகேசுவரி என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்குமுன் திருமணம் நடந்தது. இவர் களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. சத்தியமூர்த்தி தற்போது சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். உமாமகேசுவரிக்கும் அவரது மாமியார், மாமனாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது இதனால் உமா மகேசுவரி மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் முதுகுளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் திருமணம் முடிந்து  4 ஆண்டுகளே ஆவதால் பரமக்குடி ஆர்.டி.ஓ. மேல்விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story