பாலிஷ் போடுவதாக ஏமாற்றி பெண்ணிடம் நகைகள் அபேஸ்


பாலிஷ் போடுவதாக ஏமாற்றி பெண்ணிடம் நகைகள் அபேஸ்
x
தினத்தந்தி 21 July 2021 7:51 PM GMT (Updated: 2021-07-22T01:21:09+05:30)

பாலிஷ் போடுவதாக ஏமாற்றி பெண்ணிடம் நகைகள் அபேஸ் செய்த மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

வாடிப்பட்டி,ஜூலை.22-
வாடிப்பட்டி அருகே ராமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் இந்துஜா (வயது 24). இவரும், இவரது தாயார் சாந்தியும் வீட்டில் இருந்தபோது நேற்று காலை 10 மணி அளவில் பழைய பாத்திரங்களுக்கு பாலிஷ் போடுவதாக கூறி 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் இந்துஜாவிடம் சில பாத்திரங்களை எடுத்து அதற்கு பாலிஸ் போட்டு  காண்பித்தனர். அப்போது இந்துஜா சமையல் அறைக்குச் சென்றார். அப்போது தனியாக இருந்த சாந்தியிடம் அந்த மர்ம வாலிபர்கள், உங்களது தங்கச் சங்கிலியில் அழுக்கு நிறைந்து உள்ளதாகவும், அழுக்கை அகற்றி பளபளப்பாக மாற்றி தருவதாகவும் கூறினர். 
அதை நம்பி 5 பவுன் தங்க சங்கிலியையும், 2 கிராம் மோதிரத்தையும் சாந்தி கழற்றி கொடுத்தார். அப்போது நகையை பாலிஷ் செய்வது போல் நடித்து தண்ணீர் கேட்டுள்ளனர். அவர் தண்ணீர் கொண்டு வர உள்ளே சென்றதும் அந்த 2 வாலிபர்களும் நகைகளுடன் அங்கிருந்து நைசாக தப்பிச் சென்று விட்டனர்.
இது குறித்து இந்துஜா கொடுத்த புகாரின் பேரில் வாடிப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து நகையை அபேஸ் செய்துவிட்டு தப்பிச் சென்ற 2 பேரையும் ேதடி வருகின்றனர்.

Next Story