பக்ரீத் பண்டிகையை முன்னிட்பக்ரீத் பண்டிகை: பள்ளி வாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை; ஏழைகளுக்கு குர்பானி கொடுத்து மகிழ்ந்தனர்


பக்ரீத் பண்டிகையை முன்னிட்பக்ரீத் பண்டிகை: பள்ளி வாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை; ஏழைகளுக்கு குர்பானி கொடுத்து மகிழ்ந்தனர்
x
தினத்தந்தி 21 July 2021 7:52 PM GMT (Updated: 21 July 2021 7:52 PM GMT)

திருச்சியில் நேற்று பக்ரீத் பண்டிகையையொட்டி, பள்ளி வாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டதுடன், ஏழைகளுக்கு குர்பானி கொடுத்து மகிழ்ந்தனர்.

திருச்சி, 

திருச்சியில் நேற்று பக்ரீத் பண்டிகையையொட்டி, பள்ளி வாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டதுடன், ஏழைகளுக்கு குர்பானி கொடுத்து மகிழ்ந்தனர்.

பக்ரீத் பண்டிகை

இறைவனுக்காக தனது மகன் இஸ்மாயிலை தியாகம் செய்யத் துணிந்த நபியின் (ஸல்) தியாகத்தை போற்றும் வகையில் பக்ரீத் தியாகத் திருநாள் பண்டிகை துல்ஹஜ் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. மேலும் பக்ரீத் நாளில் ஏழை, எளிய மக்களுக்கு குா்பானி வழங்குவதும் இஸ்லாமியா்களின் வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகை நேற்று நாடு முழுவதும் முஸ்லிம் சமுதாய மக்களால் உற்சாகமாகக் கொண்டப்பட்டது. கொரோனா பரவலைத் தடுக்க, மக்கள் அதிகம் கூடுவதை தவிா்க்கும் வகையில் பொது இடங்களில் தொழுகை நடைபெறவில்லை. 

திருச்சியில் சிறப்பு தொழுகை

குறிப்பாக திருச்சி ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை இல்லை. திருச்சியில் முஸ்லிம் சமுதாய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான பாலக்கரை, மரக்கடை, ஆழ்வாா்தோப்பு, காயிதேமில்லத் நகா், காஜாதோப்பு, காஜாமலை, மன்னாா்புரம், கே.கே.நகா், கண்டோன்மெண்ட், தென்னூா், உறையூா், பீரங்கிகுளம், ஹசன்பாா்க், காந்தி சந்தை, அல்லிமால் தெரு, பாண்டமங்கலம், பங்காளித்தெரு, புத்தூர் கதீம் பள்ளி வாசல், தென்னூர் ஹைரோடு பள்ளி வாசல், மஜீனா பள்ளி வாசல், சவுக் முஹம்மதியா பள்ளிவாசல் பகுதி, நத்தா்ஷா பள்ளிவாசல், ரஹ்மானியாபுரம், சோமரசம்பேட்டை, குத்பிஷா தா்கா, வாளாடி உள்ளிட்ட மாநகரில் உள்ள சுமார் 100 பள்ளி வாசல்களில் சிறப்புத்தொழுகை நடைபெற்றது.

அத்துடன் அவரவா் இல்லங்களிலும், இல்லங்களுக்கு அருகில் உள்ள சிறிய திறந்தவெளி இடங்களிலும் சமூக இடைவெளியுடன் 10 முதல் 15 நபா்களாகக் கூடி பக்ரீத் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். அப்போது வியாதிகள் தீரவும், சமுதாய ஒற்றுமைக்காகவும், நாட்டு மக்கள் அனைவரும் கொரோனாவில் இருந்து மீண்டு சுவிட்சம் பெறவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.

குர்பானி வழங்கினர்

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து தொழுகையில் பங்கேற்றனா். பின்னா், ஒருவருக்கொருவா் கட்டித் தழுவி வாழ்த்து பரிமாறிக்கொண்டனர்.  மேலும் உறவினா்கள், நண்பா்கள், ஏழை, எளியோருக்கு இறைச்சி மற்றும் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்களை இஸ்லாமியா்கள் தானமாக (குா்பானி) வழங்கினா். அரியமங்கலத்தில் தனிநபர் ஒருவர் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தார். மற்றவர்கள் ஆடுகளை வெட்டி குர்பானி கொடுத்தனர்.டு திருச்சியில் முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து தொழுகையில் பங்கேற்றனா்.

பின்னா், ஒருவருக்கொருவா் கட்டித் தழுவி வாழ்த்து பரிமாறிக்கொண்டனர்.  மேலும் உறவினா்கள், நண்பா்கள், ஏழை, எளியோருக்கு இறைச்சி மற்றும் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்களை இஸ்லாமியா்கள் தானமாக (குா்பானி) வழங்கினா். அரியமங்கலத்தில் தனிநபர் ஒருவர் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தார். மற்றவர்கள் ஆடுகளை வெட்டி குர்பானி கொடுத்தனர்.

Next Story