ஜிகா வைரஸ் விழிப்புணர்வு முகாம்


ஜிகா வைரஸ் விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 21 July 2021 8:18 PM GMT (Updated: 2021-07-22T01:48:29+05:30)

புளியரையில் ஜிகா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது.

செங்கோட்டை:
ஆயுஷ் துறை மற்றும் மாவட்டகலெக்டரின் அறிவுரையின் பேரில் டெங்கு, கொரோனா மற்றும் ஜிகா வைரஸ் தொற்றுகள் பற்றிய விழிப்புணர்வு முகாம் செங்கோட்டை அருகே உள்ள புளியரை கொரோனா மருத்துவ சோதனை சாவடியில் நடைபெற்றது. டாக்டர்கள் கலா, ஹரிஹரன், தேவி, கிருஷ்ணவேணி உள்ளிட்ட மருத்துவ குழுவினர் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் சுகாதார பணியாளர்கள், காவல் துறையினர், பயணிகள், டிரைவர்கள், விவசாய தொழிலாளர்கள் உள்பட 473 பேருக்கு கபசுர குடிநீர், அமுக்குரா சூரணம், ஆடாதொடை குடிநீர் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. அக்குபிரஷர் கருவிகள் மற்றும் ஆரோக்கியமான நடைமுறைகள் பயனாளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டன. மேலும் இதுதொடர்பான விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களும் வழங்கப்பட்டன.

Next Story