பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை


பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை
x
தினத்தந்தி 21 July 2021 8:25 PM GMT (Updated: 21 July 2021 8:25 PM GMT)

கும்பகோணம் பகுதியில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுைக நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பனந்தாள்;
கும்பகோணம் பகுதியில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுைக நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். 
பக்ரீத் பண்டிகை
தியாகத்திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் பள்ளிவாசல் மற்றும் சிறப்பு திடலில் அதிகாலை சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். கும்பகோணம், மேலக்காவேரி, திருப்பனந்தாள், தத்துவாஞ்சேரி, கோணுளாம்பள்ளம், கருப்பூர், செறுகடம்பூர், சிக்கல் நாயக்கன்பேட்டை, திருலோகி, கதிராமங்கலம், சோழபுரம், திருமங்கலக்குடி, ஆடுதுறை என பல்வேறு மசூதிகளில் இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். 
தொழுகை
பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். ஆடுகளை பலியிட்டு இறைச்சியை ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்து கொண்டாடினர். முன்னதாக இஸ்லாமிய ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர், சிறுமிகளும் அதிகாலை முதல் திடலில் குவிந்தனர். காலை 7.30 மணியளவில் பெருநாள் தொழுகையை இமாம்கள் நடத்தினர். 
ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர். பின்னர் இறைவனுக்காக குர்பானி கொடுத்த  இறைச்சியை ஏழைகளுக்கு வீடு தேடி வினியோகம் செய்தனர்.
பக்ரீத் திருநாளையொட்டி இஸ்லாமியர்கள் பள்ளிவாசல்களில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

Next Story