மாரியம்மன் கோவிலில் ஆடிப்பெருவிழா


மாரியம்மன் கோவிலில் ஆடிப்பெருவிழா
x
தினத்தந்தி 22 July 2021 5:13 PM IST (Updated: 22 July 2021 5:13 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை மாரியம்மன் கோவிலில் ஆடிப்பெருவிழா இன்று வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

உடுமலை
உடுமலை மாரியம்மன் கோவிலில் ஆடிப்பெருவிழா இன்று வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
மாரியம்மன் கோவில்
உடுமலையில் சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்கும் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் ஆடிப்பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஆடிப்பெருவிழா இன்று வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. அதன்படி ஆடிமாத முதல் வெள்ளிக்கிழமையான இன்று காலை 11 மணிக்கு திருமஞ்சனம் உச்சிகால பூஜை நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. 
இதைத்தொடர்ந்து ஆடி மாதப்பவுர்ணமி பூஜை நடக்கிறது. இதையொட்டி மங்கள இசை, அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், பூர்வாங்க பூஜைகள், அக்னிகாரியம், திரவியாகுதி, பூர்ணாகுதி, மகாதீபாராதனை நிகழ்ச்சிகள் நடக்கிறது. வருகிற 30ந்தேதி  காலை 11 மணிக்கு திருமஞ்சனம் உச்சிகால பூஜையும், மாலை 6 மணிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
ஆடிப்பெருக்கு
அடுத்தமாதம்ஆகஸ்டு 2ந்தேதி ஆடி கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜையும், 3ந்தேதி ஆடிப்பெருக்கையொட்டி காலை 7 மணிக்கு ஷோடச அபிஷேகம், மகாதீபாராதனை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
6ந்தேதி 3வது வெள்ளிக்கிழமையையொட்டி காலை 11 மணிக்கு திருமஞ்சனம் உச்சிகால பூஜையும், மாலை 6 மணிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
8-ந்தேதி  ஆடி அமாவாசையையொட்டி காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. 10-ந்தேதி ஆடிப்பூரத்தையொட்டி காலை 11 மணிக்கு சவுபாக்கிய திரவியங்கள் சமர்ப்பணம், தீபாராதனை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
நாக சதுர்த்தி
12ந்தேதி  நாகசதுர்த்தியையொட்டி காலை 7 மணிக்கு மங்கள இசை, 7.15 மணிக்கு அபிஷேகம், அலங்காரம் நிகழ்ச்சிகள் நடக்கிறது. 13ந்தேதி 4வது  காலை11 மணிக்கு திருமஞ்சனம் உச்சிகால பூஜையும், மாலை 6 மணிக்கு மஞ்சள் காப்பு அலங்காரம், தீபாராதனை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.


Next Story