பொக்லைன் எந்திர உரிமையாளர்கள் 2 நாள் வேலைநிறுத்த போராட்டம்


பொக்லைன் எந்திர உரிமையாளர்கள் 2 நாள் வேலைநிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 22 July 2021 4:39 PM GMT (Updated: 2021-07-22T22:09:20+05:30)

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பொக்லைன் எந்திர உரிமையாளர்கள் 2 நாள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தினர்.

வேப்பனப்பள்ளி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொக்லைன் எந்திர உரிமையாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் சங்கம் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து 2 நாள் வேலை நிறுத்த போரட்டம் நடத்தினர். இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திர வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. இதுகுறித்து வேப்பனப்பள்ளி பொக்லைன் எந்திர உரிமையாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் சங்க கவுரவ தலைவர் கலில் கூறுகையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்தும், சாலை வரி, காப்பீடு வரி உயர்வு காரணமாக 2 நாள் வேலை நிறுத்த போரட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோம் என்றார். முன்னதாக வேப்பனப்பள்ளியில் மத்திய அரசை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சங்க தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் சோமு, பைரேசன், பதி, சீனன், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story