பவித்திரம் ஏரியில் அனுமதியின்றி மண் அள்ளிய 4 பேர் கைது பொக்லைன், 3 டிராக்டர்கள் பறிமுதல்


பவித்திரம் ஏரியில் அனுமதியின்றி மண் அள்ளிய 4 பேர் கைது பொக்லைன், 3 டிராக்டர்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 22 July 2021 10:33 PM GMT (Updated: 2021-07-23T04:05:07+05:30)

பவித்திரம் ஏரியில் அனுமதியின்றி மண் அள்ளிய 4 பேர் கைது பொக்லைன், 3 டிராக்டர்கள் பறிமுதல்.

எருமப்பட்டி,

எருமப்பட்டி அருகே உள்ள பவித்திரம் ஏரியில் நேற்று முன்தினம் இரவு பொக்லைன் எந்திரம் மற்றும் டிராக்டர் மூலம் அனுமதியின்றி மண் அள்ளுவதாக பவித்திரம் கிராம நிர்வாக அலுவலர் இந்திராவுக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவர் எருமப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று கண்காணித்தனர். அப்போது பவித்திரம் ஏரியில் அனுமதியின்றி பொக்லைன் எந்திரம் மூலம் 3 டிராக்டர்களில் மண் அள்ளியதை கண்டுபிடித்தனர். 
இதையடுத்து அங்கு மண் அள்ளிக் கொண்டிருந்த டிரைவர்கள் பவுத்திரம் புதூர் நவலடி பட்டியை சேர்ந்த சுரேஷ் (வயது 35), துரைசாமி (50), பெருமாள் மகன் பிரபாகரன் (25), திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் வாழசிராமணியை சேர்ந்த பிச்சமுத்து மகன் பிரபு (31) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். 
மேலும் மண் அள்ள பயன்படுத்திய ஒரு பொக்லைன் எந்திரம் மற்றும் 3 டிராக்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வாகன உரிமையாளர் பன்னீர்செல்வத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story