அரசு சார்பில் குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள் - மாவட்ட கலெக்டர் தகவல்


அரசு சார்பில் குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள் - மாவட்ட கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 23 July 2021 11:31 PM GMT (Updated: 2021-07-24T05:01:44+05:30)

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.,

திருவள்ளூர்,

தமிழ்நாடு அரசு வேளாண் பெருமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது தற்போதுள்ள வேலை ஆட்கள் பற்றாக்குறையை சமாளித்து வேளாண் பணிகளை குறித்த காலத்தில் செய்து முடிப்பதற்காக வேளாண்மை பொறியியல் துறை பல்வேறு நவீன வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்கி விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்கி வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மிகுந்த பயனைத் தரக்கூடிய வேளாண் எந்திரங்களான 4 மண் அள்ளும் எந்திரங்கள், 10 டிராக்டர்கள், 2 டயர் வகை மண் அள்ளும் எந்திரங்கள், இருப்பில் உள்ளது.

இதுபோன்ற டிராக்டரால் இயங்க கூடிய அனைத்து கருவிகளும் மணிக்கு ரூ.340 என்ற குறைந்த வாடகை அடிப்படையில் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாடகைக்கு வழங்கப்படுகின்றன. நிலம் சமன் செய்யும் எந்திரம் மணிக்கு ரூ.840 என்ற குறைந்த வாடகையிலும், பண்ணைக்குட்டைகள் அமைத்திடவும், புதர்களை அகற்றவும், சக்கர வகை மண் அள்ளும் எந்திரங்கள் மணிக்கு 660-க்கும், விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்படுகிறது.

எனவே மேலே குறிப்பிட்ட வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் தேவைப்படும் விவசாயிகள் வேளாண்மை பொறியியல் துறையின் உப கோட்ட அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

Next Story