கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் எச்சரிக்கை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து சாராயம் காய்ச்சுபவர்கள் மற்றும் விற்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் எச்சரிக்கை விடுத்துள்ளார்
கச்சிராயப்பாளையம்
சாராய வேட்டை
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள மேல் வாழப்பாடி வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக 10 பேரல்களில் சாராய ஊறல் போட்டு வைத்திருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக்குக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் கல்வராயன் மலைமேல் வாழப்பாடி வனப்பகுதியில் போலீசார் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஓடையில் 10 பேரல்களில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்த போலீசார் அவற்றை தரையில் கொட்டி அழித்தனர்.
ரவுடிகள் பட்டியல்
பின்னர் போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் கூறும்போது, கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் இதுவரை சாராயம் காய்ச்சியதாக கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு மீண்டும் வெளியில் வந்து தொடர்ந்து சாராயம் காய்ச்சி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்து வருபவர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது ரவுடி லிஸ்ட் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் கரியாலூர் போலீஸ் நிலையத்தில் மட்டும் 80 பேர் உள்ளனர். இதன் பிறகும் சாராயம் காய்ச்சினாலோ அல்லது விற்றாலோ அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
அப்போது கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், கரியாலூர் பேரீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story