கொரோனாவால் பாதிக்கப்படுவோரை விட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு


கொரோனாவால் பாதிக்கப்படுவோரை விட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு
x
தினத்தந்தி 25 July 2021 2:52 AM IST (Updated: 25 July 2021 2:52 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களை விட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 7 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 19 பேரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 12 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 31 பேரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்டங்களில் கொரோனாவுக்கு பாதிக்கப்படுவோரை காட்டிலும், அதில் இருந்து குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 171 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 268 பேரும் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 637 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 858 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
தற்போது கோவேக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதால் நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் 2,571 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 1,771 பேருக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. கோவேக்சின் தடுப்பூசி இல்லாததால், 2-வது தவணை தடுப்பூசி போட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 8,960 கோவிஷீல்டு தடுப்பூசி கையிருப்பில் உள்ள நிலையில், மேலும் மாவட்டத்திற்கு கூடுதலாக 5,000 கோவிஷீல்டு தடுப்பூசி அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால் தொடர்ந்து கோவேக்சின் தடுப்பூசி கையிருப்பில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story