நாளை மின் தடை


நாளை மின் தடை
x
தினத்தந்தி 26 July 2021 1:02 AM IST (Updated: 26 July 2021 1:02 AM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணிகளுக்காக துலுக்கப்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.

விருதுநகர், 
விருதுநகர் அருகே உள்ள துலுக்கப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைெபற உள்ளன. ஆதலால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் ஆர்.ஆர். நகர், முக்குரோடு, வச்சக்காரப்பட்டி, பட்டம்புதூர், மலைப்பட்டி, ஆவுடையாபுரம், நடுவப்பட்டி, இ.முத்துலிங்காபுரம், இ.குமாரலிங்கபுரம், கன்னிசேரி, வாடியூர், முதலிப்பட்டி, லட்சுமியாபுரம், அம்மாபட்டி, ஒண்டிபுலி நாயக்கனூர், கணபதி மில் குவார்ட்டர்ஸ் தென்பகுதி, இனாம் ரெட்டியப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும். ேமற்கண்ட தகவலை மின் வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார். 

Next Story