மாவட்ட செய்திகள்

பனப்பாக்கம் அருகே வேனில் கடத்திய 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் + "||" + Seizure of 10 tonnes of ration rice smuggled in a van

பனப்பாக்கம் அருகே வேனில் கடத்திய 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

பனப்பாக்கம் அருகே வேனில் கடத்திய 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
வேனில் கடத்திய 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
நெமிலி

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பனப்பாக்கம் சுற்றுவட்டார பகுதியில் பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி கடத்துவதாக நெமிலி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து பனப்பாக்கம் சுற்றுவட்டார பகுதியில் நெமிலி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பனப்பாக்கம் 4 ரோடு பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் வேகமாக வந்த  வேனை மடக்கி சோதனை செய்தனர். சோதனையில் வேனில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வேன் டிரைவர் ஜீவா என்பவரிடம் விசாரித்தபோத பனப்பாக்கம் பகுதியிலிருந்து காஞ்சசீபுரத்திற்கு ரேஷன் அரிசி எடுத்துச் செல்வதாக தெரிவித்தார். 

அதைத்தொடர்ந்து வேனுடன், 1½ டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். டிரைவர் ஜீவாவை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.