திருப்பத்தூர் அருகே கிருஷ்ணதேவராயர் ஆட்சிக்கால செப்பு பட்டயம் கண்டுபிடிப்பு


திருப்பத்தூர் அருகே கிருஷ்ணதேவராயர் ஆட்சிக்கால செப்பு பட்டயம் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 26 July 2021 3:22 PM GMT (Updated: 26 July 2021 3:22 PM GMT)

திருப்பத்தூர் அருகே கிருஷ்ணதேவராயர் ஆட்சிக்கால செப்பு பட்டயம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

திருப்பத்தூர்

செப்பு பட்டயம்

திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரி பேராசிரியர் ஆ.பிரபு, சமூக ஆர்வலர் வே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் 600 ஆண்டுகள் பழமையான அரிய வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கிய செப்புப்பட்டயத்தினைக் கண்டறிந்தனர்.

இது குறித்து ஆ.பிரபு கூறியதாவது:-

கிருஷ்ணதேவராயர் காலலம்

கால்நடை டாக்டர் அன்புச்செல்வம் அளித்த தகவலின் அடிப்படையில் நடுகல் ஒன்றைக் காண அகரம் என்ற இடத்திற்குச் சென்றபோது, அவ்வூரில் உள்ள லட்சுமி நாராயணசாமி கோவில் தர்மகர்த்தா பலராமன் என்பவரிடம் செப்புப்பட்டயம் இருப்பதாக தெரிவித்தார். அதை சுத்தம் செய்து படித்தபோது, அந்தப்பட்டயம் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர் காலத்தை சேர்ந்தது என்பதை அறியமுடிந்தது.

615 கிராம் எடையுடன், 36 செ.மீ நீளமும், 23.5 செ.மீ அகலமும் கொண்டதாக உள்ளது. இரண்டு பகுதிகளாக உள்ள இதனை துளையிட்டு வளையங்களால் இணைத்துள்ளனர். மேற்புறம் அழகிய வேலைப்பாடுகளுடன் அலங்கரிக்கப்பட்டு, சூரியன், பிறைச்சந்திரன் சாட்சியங்களாகவும், அதன் கீழே வலதுபுறம் விநாயகர், இடது புறம் காளை உருவம், நடுவே சிவலிங்கம் வரையப்பட்டுள்ளன. இவற்றின் கீழே சிவன்துணை அருணாத்திரி ஈஸ்வரர் சாதனப் பட்டயம் என்று தொடங்கி 46 வரிகள் எழுதப்பட்டுள்ளன.

சகாயம் கிடைக்கும்

இதனைப் பாதுகாப்பவருக்கு வாக்கு சகாயம், சரீர சகாயம், அறத்த சகாயம் கிடைப்பதோடு, கோதானம், பூதானம், கன்னிகாதானம், அன்னதானம், சொர்ணதானம், வலைத்திரதானம் பெறக்கடவது என்று எழுதப்பட்டுள்ளது.
தொண்டை மண்டலமானது 24 கோட்டங்களை உள்ளடக்கியது என விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இச்செப்புப்பட்டயம் தொண்டைமண்டல வரலாற்றில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story