குற்றங்களை தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பேச்சு


குற்றங்களை தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பேச்சு
x
தினத்தந்தி 26 July 2021 3:52 PM GMT (Updated: 26 July 2021 3:52 PM GMT)

குற்றங்களை தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் கூறினார்.

திருவாரூர், 

திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் போலீஸ்- பொதுமக்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதற்கான நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கி கால்பந்து போட்டியினை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

போலீசார்-பொதுமக்களுக்கு இடையே நல்லுறவை வளர்க்கும் வகையில் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் உரிய நேரத்தில் போலீசாருக்கு தகவல் தெரிவித்து ஒத்துழைப்பு அளித்தால் நிச்சயம் குற்றங்களை தடுக்க முடியும். எனவே குற்றங்களை தடுப்பில் பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை.

விபத்து, சமூக விரோத செயல்கள் நடந்தால் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். போலீசார் பொதுமக்களுக்கு சேவை செய்ய தயாராக இருக்கிறோம். எனவே போலீசாருக்கு பொதுமக்கள் தூதுவராக இருந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story