மாவட்ட செய்திகள்

மாட்டுக்கு இரை தேட சென்ற பெண் விபத்தில் பலி. மோட்டார் சைக்கிள் எரிப்பு + "||" + A woman who went in search of prey for a cow was killed in an accident

மாட்டுக்கு இரை தேட சென்ற பெண் விபத்தில் பலி. மோட்டார் சைக்கிள் எரிப்பு

மாட்டுக்கு இரை தேட சென்ற பெண் விபத்தில் பலி. மோட்டார் சைக்கிள் எரிப்பு
மாட்டுக்கு இரை தேட சென்ற பெண் விபத்தில் பலி
திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகில் உள்ள வானியந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் சோலையம்மாள் (வயது 60). இவர் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் அவலூர்பேட்டை சாலை கூட்ரோட்டில் மாட்டிற்கு இரை தேடுவதற்காக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக சோலையம்மாள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோலையம்மாளின் மகன் மணிகண்டன் ஆத்திரத்தில் விபத்து ஏற்படுத்தி மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்துள்ளார்.  இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 மேலும் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருவண்ணாமலை தாலுகா போலீசார் விபத்தில் உயிரிழந்த சோலையம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.