கே.வி.குப்பம் அருகே அரசு பள்ளி எதிரில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு


கே.வி.குப்பம் அருகே அரசு பள்ளி எதிரில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு
x
தினத்தந்தி 26 July 2021 11:15 PM IST (Updated: 26 July 2021 11:15 PM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளி எதிரில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு

கே.வி.குப்பம்

கே.வி.குப்பம் தாலுகா பனமடங்கியை அடுத்த பள்ளத்தூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளி எதிரில்  டாஸ்மாக் மதுக்கடை அமைய இருப்பதைக் கண்டித்து வேலூர் கலெக்டர் உள்ளிட்டோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். 

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நாங்கள் சுமார் 300 பேர் பள்ளத்தூர் கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்திற்கு டாஸ்மாக் கடை வர போவதாக தகவல் கிடைத்துள்ளது. அதற்கு அருகில் அரசு பள்ளி, கோவில், குடியிருப்பு பகுதிகள் ஆகியவை அமைந்துள்ளன. இப்பகுதியில் மதுக்கடை வந்தால் பள்ளி மாணவர்கள் உள்பட ஊர் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் எனவே டாஸ்மாக் கடை வருவதைத் தடுத்து நிறுத்த ஊர் பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். 
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story