கஞ்சா விற்ற 4 பேர் கைது
கரூர் பகுதிகளில் போலீசார் நடத்திய தீவிர சோதனையில் கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 3½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கரூர்
போலீசார் சோதனை
கரூர் பகுதிகளில் கஞ்சா வைத்து விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்தது. இதையடுத்து கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் உத்தரவின்பேரில், கரூர் டவுன், வெங்கமேடு, தாந்தோணிமலை, பசுபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கரூர் ஈரோடு ரோட்டில் முட்புதர் அருகே கஞ்சா வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த சதீஷ்குமார் (வயது 37) என்பவரை கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் கைது செய்து, அவர் விற்பனைக்காக வைத்திருந்த 1¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
3 கிலோ 450 கிராம் கஞ்சா பறிமுதல்
இதேபோல் வெங்கமேடு பகுதியில் கஞ்சா விற்றுக்கொண்டிருந்த கமல் (42), அருள்முருகன் (24) ஆகியோரை வெங்கமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையிலான போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் கரூர் ராயனூர் பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த சுகந்தன் (35) என்பவரை தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கநாதன் தலைமையிலான போலீசார் கைது செய்து, அவர் விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கரூர் பகுதியில் மட்டும் ஒரே நாளில் 3 கிலோ 450 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story