கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன ஆர்ப்பாட்டம்


கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 July 2021 7:29 PM GMT (Updated: 26 July 2021 7:29 PM GMT)

நெல்லையில் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன ஆர்ப்பாட்டம் நடந்தது.

நெல்லை:

நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் பகுதியில், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் விறகு அடுப்பில் சமையல் செய்வது போல் அமைப்பு ஏற்படுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நெல்லை மாவட்ட அமைப்பாளர் கீதா தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட இணைச்செயலாளர் முருகன் தொடங்கி வைத்தார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மோகன், மாநிலக் குழு உறுப்பினர் பெருமாள், வரகுணன் ஆகியோர் பேசினர். இதில் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் மல்லிகா, மகேசுவரி, உலகம்மாள், பிரேமா, கனகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story