மாவட்ட செய்திகள்

போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Policeman commits suicide by hanging

போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை

போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
நெல்லையில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
நெல்லையில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீஸ்காரர்

நெல்லை மேலப்பாளையம் குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் குமரேசன் (வயது 39). பாளையங்கோட்டை ஆயுதப்படை போலீஸ்காரரான இவர், போலீஸ் அதிகாரிகளின் டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு தங்கபுஷ்பம் என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு குமரேசன், நெடுஞ்சாலை ரோந்து பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால் அவர் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் குமரேசன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த குமரேசனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரை கண்ணன், துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. டிப்ளமோ என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
ராதாபுரம் அருகே டிப்ளமோ என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. கட்டிட தொழிலாளி தற்கொலை
வேடசந்தூர் அருகே கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3. கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை; உதவி கலெக்டர் விசாரணை
ஏர்வாடி அருகே கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து ெகாண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
4. 3 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை
ஜெயங்கொண்டம் அருகே 3 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5. பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை
நெல்லை சுத்தமல்லியில் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.