அரக்கோணம் அருகே ரெயில் மறியலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு
ரெயில் மறியலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு
அரக்கோணம்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த அன்வர்திகான்பேட்டை ரெயில் நிலையம் அருகே அப்பகுதிகளில் இருந்து செல்லும் ரெயில் பயணிகள் சீசன் டிக்கெட் வழங்கக் கோரி நேற்று முன்தினம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சதாப்தி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில், ஏலகிரி எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரெயில்கள் என 7 ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன..
இது குறித்து அரக்கோணம் ரெயில் நிலைய டிராபிக் இன்ஸ்பெக்டர் ரகு அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மார்க் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சாம்ராஜ் ஆகியோர் ரெயில் மறியல் போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story