5 கிலோ கஞ்சா பறிமுதல். 2 பேர் கைது


5 கிலோ கஞ்சா பறிமுதல். 2 பேர் கைது
x
தினத்தந்தி 27 July 2021 9:19 PM IST (Updated: 27 July 2021 9:19 PM IST)
t-max-icont-min-icon

5 கிலோ கஞ்சா பறிமுதல்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை பகுதியில் அதிகளவில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார்ரெட்டிக்கு புகார்கள் வந்து உள்ளது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் ஜவ்வாதுமலை பகுதியில் தங்கி தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்ேபாத பலாம்பட்டு கிராமத்தில் பெண் உள்பட 2 பேர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பாலாம்பட்டு கிராமத்தை சேர்ந்த சின்னசாமி மனைவி வெண்ணிலா (வயது 35), அதேப் பகுதியை ேசர்ந்த சண்முகம் (26) என்பதும் தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து தலா 2 கிலோ 700 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Next Story