இந்திய கலாசார நட்புறவு கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


இந்திய கலாசார நட்புறவு கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 July 2021 10:49 PM IST (Updated: 27 July 2021 10:49 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் இந்திய கலாசார நட்புறவு கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி:
தன் நாட்டு மக்களுக்கு மருத்துவம், கல்வியை இலவசமாக வழங்கி வரும் சின்னஞ்சிறு சோசலிச நாடான கியூபா நாட்டிற்கு பொருளாதார தடை விதித்த அமெரிக்காவை கண்டித்து கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு இந்திய கலாசார நட்புறவுக் கழகம் மற்றும் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நட்புறவு கழக மாநில செயலாளர் தமிழரசன் தலைமை தாங்கினார். கூட்டமைப்பு செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின், நாம் தமிழர் கட்சி தொகுதி செயலாளர் மாரியப்பன், புரட்சி பாரதம் மாவட்ட செயலாளர் தாவீது ராஜா, அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் கருப்பசாமி, ஐ.என்.டி.யு.சி. மாவட்ட செயலாளர் ராஜசேகர், பகத்சிங் ரத்ததான கழக தலைவர் காளிதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story