தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்
கடையநல்லூரில் தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் நகரசபை அலுவலகம் முன்பு ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் திடீரென வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சங்க துணை பொதுச்செயலாளர் சின்னச்சாமி தலைமை தாங்கினார்.
இதில் ஈடுபட்ட பணியாளர்கள் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக 80-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு வழங்கப்படும் தினசரி சம்பளம் ரூ.272 என்று இருப்பதை ரூ.422-ஆக உயர்த்தி வழங்க வேண்டும். கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.
தொடர்ந்து நகரசபை ஆணையர் ரவிசந்திரன் மற்றும் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சூரியமூர்த்தி உள்ளிட்டவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் சந்திரசேகர், சி.ஐ.டி.யு. மாவட்ட துணைச்செயலாளர் ராஜசேகர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story