நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்த பெண்


நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்த பெண்
x
தினத்தந்தி 28 July 2021 1:20 AM IST (Updated: 28 July 2021 1:20 AM IST)
t-max-icont-min-icon

கணவருடன் தன்னை சேர்த்து வைக்கக்கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்த பெண் தற்கொலை செய்து கொள்வேன் என போலீசாரிடம் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை:
கணவருடன் தன்னை சேர்த்து வைக்கக்கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்த பெண் தற்கொலை செய்து கொள்வேன் என போலீசாரிடம் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மண்எண்ணெய் பாட்டிலுடன்...

நெல்லை மாவட்டம் அம்பையை சேர்ந்தவர் இந்துமதி (வயது 24). இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்துமதியின் கணவர் அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். 

இந்தநிலையில், இந்துமதி நேற்று தனது தாய் மாரியம்மாள் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் மண்எண்ணெய் பாட்டிலை வைத்திருந்தார்.

விசாரணை

அப்போது அவர், ‘தன்னை தனது கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறி போலீஸ் நிலையங்களில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, கணவருடன் என்னை சேர்த்து வைக்க வேண்டும், இல்லையெனில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்வேன்’, என அங்கிருந்த போலீசாரிடம் கூறினார்.

உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவபிரசாத், மண்எண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்தார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போதும் அவர் கணவருடன் தன்னை சேர்த்து வைக்க வேண்டும், என கண்ணீர் மல்க கூறினார்.

பரபரப்பு

இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த இளம்பெண் இந்துமதியை, போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைத்து வர உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து குழந்தைகளுடன் இந்துமதி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்றார்.
நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு இளம்பெண் மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்த சம்பவம் நேற்று அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story