சேலத்தில் மக்கள் குறைகேட்பு முகாம்
சேலத்தில் மக்கள் குறைகேட்பு முகாம் நடந்தது.
சேலம்
சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மக்கள் குறைகேட்பு முகாம் நடந்தது. வாய்க்கால்பட்டறை ஜெய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமிற்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார். வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வாங்கினார். அப்போது, பொதுமக்களிடம் இருந்து வாங்கிய மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு காணப்படும் என்றார்.
கலெக்டர் கார்மேகம் பேசுகையில், கொரோனா பரவலால் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்த முடியவில்லை. இதனால் பொதுமக்களை நேரடியாக சந்தித்து மனுக்களை வாங்க இந்த முகாம் நடத்தப்படுகிறது என்றார். தொடர்ந்து அம்மாபேட்டை மிலிட்டரி ரோடு, பொன்னம்மாபேட்டை, கோட்டை, வெங்கடப்பன் சாலை, அரிசிப்பாளையம், சாமிநாதபுரம் ஆகிய இடங்களில் இந்த முகாம் நடந்தது.
முகாமில் தி.மு.க. அவைத்தலைவர் கலையமுதன், துணை செயலாளர் ரகுபதி, மாநகர செயலாளர் ஜெயக்குமார், பகுதி செயலாளர்கள் ராஜா, இளந்திரையன், விவசாய அணி மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story