அனுமதியின்றி போராட்டம் விவசாயிகள் சங்கத்தினர் 33 பேர் மீது வழக்கு


அனுமதியின்றி போராட்டம் விவசாயிகள் சங்கத்தினர் 33 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 28 July 2021 11:04 AM IST (Updated: 28 July 2021 11:04 AM IST)
t-max-icont-min-icon

அனுமதியின்றி போராட்டம் விவசாயிகள் சங்கத்தினர் 33 பேர் மீது வழக்கு.

திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நேற்று முன்தினம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வேளாண் சட்டத்தை எதிர்த்தும், மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவர்கள் சட்டவிரோதமாக முன் அனுமதியின்றி ஒன்று கூடி கொரோனா தொற்று பரவும் விதமாக பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக சாலையில் நின்று கோஷமிட்டனர்.

இது தொடர்பாக திருவள்ளூர் டவுன் போலீசார் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் 33 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story