அதியமான்கோட்டை அருகே தொழிலாளி வீட்டில் 12 பவுன் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


அதியமான்கோட்டை அருகே தொழிலாளி வீட்டில் 12 பவுன் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 28 July 2021 9:31 PM IST (Updated: 28 July 2021 9:31 PM IST)
t-max-icont-min-icon

அதியமான்கோட்டை அருகே தொழிலாளி வீட்டில் 12 பவுன் நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நல்லம்பள்ளி:
அதியமான்கோட்டை அருகே தொழிலாளி வீட்டில் 12 பவுன் நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தொழிலாளி
அதியமான்கோட்டை அருகே உள்ள எர்ரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 57). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 26-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு மகனுக்கு திருமண ஏற்பாடு தொடர்பான பணிக்கு குடும்பத்தினருடன் தர்மபுரிக்கு சென்று இருந்தார். பின்னர் அவர் மீண்டும் வீடு திரும்பியபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. 
இதனால் அதிர்ச்சி அடைந்த கந்தசாமி உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 12 பவுன் நகைகள் திருட்டு போனது தெரிந்தது. வீடு பூட்டப்பட்டு இருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து நகையை திருடிச்சென்றது தெரியவந்தது.
வலைவீச்சு
இதுகுறித்து அவர் அதியமான்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து கந்தசாமி வீட்டு அருகே உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story