ரூ.1 லட்சம் குட்கா பறிமுதல்; 2 பேர் கைது


ரூ.1 லட்சம் குட்கா பறிமுதல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 29 July 2021 1:26 AM IST (Updated: 29 July 2021 1:26 AM IST)
t-max-icont-min-icon

பணகுடியில் ரூ.1 லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பணகுடி:

பணகுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜமால், மகேந்திரன் ஆகியோர் பணகுடி மற்றும் பழவூர் அருகே வாகன சோதனை செய்தனர். அப்போது 2 இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை நிறுத்தி சோதனை செய்தனர். அவர்களிடம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள குட்கா பாக்கெட்டுகள் அடங்கிய மூட்டைகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக திருமலாபுரத்தை சேர்ந்த லட்சுமணன் மகன் ஜெகநாதன் (வயது 44), பழவூரை சேர்ந்த முருகன் மகன் சோபன் (23) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story