மாவட்ட செய்திகள்

வெளிநாட்டில் உள்ள கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக ரூ.39 லட்சம் மோசடி வாலிபர் கைது + "||" + Rs 39 lakh fraudulent youth arrested for buying seats in a foreign college

வெளிநாட்டில் உள்ள கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக ரூ.39 லட்சம் மோசடி வாலிபர் கைது

வெளிநாட்டில் உள்ள கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக ரூ.39 லட்சம் மோசடி வாலிபர் கைது
வெளிநாட்டில் உள்ள கல்லூரியில் சேர சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.39 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பூந்தமல்லி,

சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 23). இவர், ஏரோனாட்டிகல் படித்து முடித்துள்ளார். மேற்படிப்புக்காக வெளிநாட்டில் சென்று படிக்க ஆசைப்பட்டார்.

இதையறிந்த அவரது வீட்டின் அருகே வசிக்கும் கார்த்திக் (35) என்பவர் வெளிநாட்டில் உள்ள கல்லூரியில் படிக்க சீட் வாங்கி தருவதாக கூறினார். அதை நம்பி முதல் தவணையாக ரூ.38 லட்சத்து 89 ஆயிரத்தை கார்த்திக்கிடம் வெங்கடேஷ் கொடுத்ததாக கூறப்படுகிறது.


வாலிபர் கைது

ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட கார்த்திக், சொன்னபடி வெங்கடேசுக்கு இதுவரை வெளிநாட்டில் உள்ள கல்லூரியில் சேர சீட் வாங்கி தரவில்லை. இதனால் பணத்தை திருப்பி தரும்படி கேட்டும் தராமல் காலம் தாழ்த்தி வந்தார்.

இந்த மோசடி குறித்து புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி சைதாப்பேட்டை கோர்ட்டில் வெங்கடேஷ் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து கோர்ட்டு உத்தரவின்பேரில் பணமோசடி செய்த கார்த்திக் மீது விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள கார்த்திக்கின் மனைவி சவ்கார்த்திகா (30) என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சிறுமியை அடித்துக்கொன்று உடலை ஆற்றில் வீசிய கொடூரம் கள்ளக்காதலனுடன் தாய் கைது
தஞ்சையில் உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த 7 வயது சிறுமி அடித்துக்கொலை செய்யப்பட்டாள். இது தொடர்பாக சிறுமியின் தாய் மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து உள்ளனர்.
2. கள்ளக்காதல் தகராறில் ரவுடியின் மனைவி வெட்டிக்கொலை 4 பேர் கைது
கள்ளக்காதல் தகராறில் ரவுடியின் மனைவி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கள்ளக்காதலன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. முகநூலில் பெண் போல பழகி ஏமாற்றியவர் கொலை காஞ்சீபுரம் வாலிபர் கைது
எட்டயபுரம் அருகே முகநூலில் பெண் போல் பழகி ஏமாற்றியவரை கொலை செய்ததாக காஞ்சீபுரத்தை சேர்ந்த வாலிபரை கைது செய்யப்பட்டுள்ளனார்.
4. திருவள்ளூர் மாவட்டம் வாணிவிலாசபுரம் கிராமத்தில் கோஷ்டி மோதல்; 6 பேர் கைது
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா வாணிவிலாசபுரம் கிராமத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சிலரிடையே முன்விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் 2 தினங்களுக்கு முன் தேர்தல் பகை காரணமாக அவர்கள் 2 கோஷ்டிகளாக பிரிந்து தடிகளால் தாக்கிக் கொண்டனர்.
5. மத்திய பிரதேசத்தில் போலியான பான், வாக்காளர் அடையாள அட்டைகளை தயாரித்த 2 பேர் கைது
மத்திய பிரதேசத்தில் பான், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட போலி ஆவணங்களை தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.