கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க வலியுறுத்தல்
கோவில்பட்டி அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க கோரி நேற்று யூனியன் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க கோரி நேற்று யூனியன் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
யூனியன் அலுவலகம் முற்றுகை
கோவில்பட்டி அடுத்துள்ள இலுப்பையூரணி பஞ்சாயத்து தாமஸ் நகர் பகுதியை சேர்ந்த மக்கள் 6-வது வார்டு உறுப்பினர் சரஸ்வதி நடராஜன், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் பிரபாவளவன் ஆகியோர் தலைமையில், பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்
தொடர்ந்து அவர்கள், பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர் சீனிவாசனிடம் மனு கொடுத்தனர்.
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
அதில் கூறியிருப்பதாவது:-
கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி பஞ்சாயத்து தாமஸ் நகர் வளர்ச்சி அடைந்து வரும் பகுதியாகும். இங்குள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப இப்பகுதியில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும். இதுகுறித்து பலமுறை மனு வழங்கியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் அனைத்து மக்களுக்கும் சீராக குடிநீர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் நிலையில் இருக்கிறது.
எனவே, மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்திருந்தனர்.
இந்த கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆணையாளர் உறுதியளித்தார்.
Related Tags :
Next Story